திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும் ஆதிரா என்ற 3 மூன்று வயது மகளும் உள்ளார். பெரியசாமி அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இன்று மாலையில் பெரியசாமியின் மனைவி பார்வதி தனது மகள் ஆதிராவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பார்வதியிடம் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். பார்வதி அதை தடுத்துள்ளார்.
அப்போது அருகே இருந்த பார்வதியின் மகள் ஆதிராவை கையில் தூக்கிக் கொண்டு உனது மகளை கழுத்தை நெரித்துள்ளார். இதில் குழந்தை ஆதிரா மயங்கி விழுந்துள்ளார். குழந்தை மயங்கி விழுந்ததும், அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார்.
உடனே அருகே இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்த குழந்தையின் தாய் பார்வதி நடந்த விபரத்தை கூறினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஆதிரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


