சித்திரைத் திருவிழாவா?!
பாப்பாக்குடியார் கவிஞர் இரா. செல்வமணி அவர்கள் பணி நிறைவுப் பாராட்டு விழா
பாரதிர முழங்கிய சித்திரைத் திருவிழா… நாள்;;மே 7/2023
இடம்; லிட்டில் ஃபிளவர் பள்ளி, பேட்டை
(ஓர் ஆன்லைன் நேர்காணல்)
கலைஞரின் ரசிகராக இருந்தபோதும் நினைத்ததை முடிப்பவனாகத் திகழ்கிறார் பாப்பாக்குடியார். தான் நினைத்தபடி கவிஞர் முத்துலிங்கம் அவர்களை அழைத்து வந்து கலைமாமணி ஏர்வாடியார் தலைமையில் ‘நினைவோடும் வீதி’ நூல் வெளியீட்டு விழா நடத்திவிட்டார் .
தம்பி நெருப்பு விழிகள் வேலாயுதம் பேசும்போது ஆன்லைனில் வந்தேன். At a time 6 channels.புத்தகத்தின் கட்டுரைகளை உள்ளடக்கத்தைப் புட்டு புட்டு வைத்தார் (அதே நேரம் பால்ய காலத்தில் ஓடிச் சென்று கொண்டிருந்த சிறுவன் செல்வமணி பெயர் சொல்லி அழைத்த சீதா பற்றியும் குறிப்பிட்டார்) மதியம் இரண்டாவது அமர்வு முடிந்து மாலை நான்கு மணி அளவில் செல்வமணி சார் நன்றி நவிலும்போது நான் நெகிழ்ந்தேன் .படுபாவிப் பயலுக நம்மை இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் செய்து விட்டார்களே?!என்று வருந்தினேன்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் பேசும்போது பாப்பாக்குடியில் தந்தையை இழந்த ஏழு குழந்தைகளை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய தாயார் சரஸ்வதி அம்மாளை நினைவு கூர்ந்தார் .அப்போது அவர்கள் சபைக்கு வரவில்லை ..தாமதமாக வந்தார்கள் பார்த்தேன்.
கல்விச் சக்கரவர்த்தி மரியசூசை இவருக்கு தனது மனதில் இடமளித்ததோடு விழாவுக்காகவும் இடமளித்தார். பாப்பாக்குடியாரின் பன்முக ஆளுமையை எடுத்துக் கூறி கொஞ்சம் நீண்ட உரையாற்றி மனதில் இடம் பிடித்தார்.
கவிதை உறவு கவிஞர் ஏர்வாடியார் பேசும் போது கவிதை நடை மிளிர்ந்தது .தான் பணிபுரியும் போது கலந்து கொள்ளும் நிகழ்வில் மேலதிகாரியை அழைத்துச் சென்ற இலாவகத்தைச் சொல்லி ரகசியத்தைப் போட்டு உடைத்தார்கள். பிரார்த்தனையோடு கூடியது வாழ்த்துரை என்று பேசினார். .அரியலூர் முதல் அம்பாசமுத்திரம் வரை செங்கோட்டை முதல் சுத்தமல்லி வரை ஆசிரியரின் நண்பர்கள் உறவுகள் மாணவச் செல்வங்கள் அனைவரின் வருகை அனைவரையும் திகைக்கச் செய்தது .
திருச்சி ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் கவிஞர் முத்துலிங்கம் உரை 20 நிமிடங்கள் வரை இருந்தது. புத்தகங்கள் எத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தன என்று பட்டியல் இட்டார். கவிதை எழுதியதற்கு கணித ஆசிரியரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
வீரவநல்லூர் கவிஞர் பேசும்போது “கவிஞர் செல்வமணி சார் எல்லோருக்கும் பிடித்தவர்.யாவரையும் மதிப்பவர் யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்காதவர்”” என்று குறிப்பிட்டார்
பாப்பாக்குடி முருகன் பேசும் போது பாப்பாக்குடியாரின் துணைவியாரை வாழ்த்தினார். அவருடைய மதினியார் உரிமையோடு “ஏன் வரவில்லை. வாருங்கள் சாப்பிடுங்கள்” என்று விசாரிப்பார்கள் உபசரிப்பார்கள் என்று நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்து பாராட்டினார்.
மதியம் மாணவர்கள் மற்றும் மாணவியரைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசச் சொல்லி ரசித்தார். முதல் நாள் இரவில் பிளக்ஸ் கட்ட தாமதமாக வந்த பணியாளரை ரெண்டு ரைடு விட்டார். தனது துணைவியாரை சிறப்பு செய்ய அழைத்தபோது “” ரெண்டு நிமிடத்தில் வரவேண்டும் என்று சொல்லி அதட்டுவது மாதிரி ஒரு உடான்ஸ் விட்டார்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சியார் உச்சி முகர்ந்து வாழ்த்தினார். நூலகர்அனைவரும் நண்பர் அகிலன் தொடங்கி சகோ. முத்துக்கிருஷ்ணன் வரை நற்பணி மன்ற முத்துசாமி அண்ணாச்சி மற்றும் பாட்டு பாடி வாழ்த்திய உக்கிரன்கோட்டை மணியார்… . ….சொல்லி கொண்டே போகலாம்
மேடைக்கு அழைத்தும் தன் மாணவி ஆறுமுகத்தம்மா வரவில்லை என்று வருத்தப்பட்டார். மாணவர் ஒருவர் எங்களுக்கு பேசச் சொல்லி கொடுத்தது நம்ம சார் தான் என்று புகழ்ந்தார். 3.30 க்கு முடித்து விடுவேன் என்று சொல்ல “”மணி நான்கு ஆகிட்டா டீ வடை சொல்ல வேண்டும்”” என்று ஆஸ்தான தொகுப்பாளர் கவிஞர் செ. ச. பிரபு மைக்கில் சொன்னார்.
“அதற்கு அஞ்சாதவர் செல்வமணி சார்”” என்று நான் இங்கிருந்து சொல்லிக் கொண்டே பார்த்தேன். பிரபு துணைவியார் பங்களிப்பும் பாராட்டுக்குரியதே. பிரபு தனது தந்தை செல்வ பாரதி பற்றி முத்துலிங்கம் ஐயா முன்னிலையில் எடுத்துக் கூறினார்.
மேடையில் வேலாயுதம் சேர்மலிங்கம் நல்ல உதவி செய்ய அடடா. நல்ல நிகழ்வு. கவிஞர் ஜெயபாலன் அண்ணாச்சி நண்பர் முனைவர் கவிஞர்.கோ கணபதி சுப்ரமணியம் மேடையில் இருந்து முழுநேர பங்களிப்பு செய்தார். கவிஞர் தமிழ்ச் செம்மல் பாமணி சேவகம் இன்னும்சிறப்பு. முகப்பில் சுத்தமல்லி சொக்கலிங்கம் அண்ணாச்சி மதினியுடன், புத்தநேரி செல்லப்பா அண்ணாச்சி கவிஞர் முத்துவேலனார் துணைவியாருடன் வரிசையாக… அமர வெள்ளுடை தரித்த நல்ல நாற்காலிகள்.
அரிமா சகோதரர் ஜானகிராம் அந்தோணி தன் பெயர் போட மறந்து விடாதீர்கள் அடுத்த விழாவில் என்று நயத்தக்க நாகரீகத்துடன் பேசினார். பெயர் போட்டவர்கள் பேசினால் ஒரு நாள் போதாது. பெயர் போடாத சிலரும் ஆர்வத்துடன் பாப்பாகுடியாரின் மீது கொண்ட பாசமிகுதியால் பேசினார்கள்.
நெஞ்சுக்கு நெருக்கமான முரசொலி முருகன் தச்சை மணி பெயர்களை ஸ்பெஷலாகச் சொல்லி அழைத்தார்.”செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கு ஈயப்படும்” என்ற குறள் வழி செலவமணியார் பசியின்றி நாள் முழுவதும் பரபரப்பானார். நெல்லை தென்காசி மாவட்ட தமிழ் அமைப்புகள் அனைத்தும் வரவு..அனைவரும் இவருக்கு உறவு.. வாசகர்கள் வட்ட ஆளுயர மாலை அசத்தல்.
நமது ஒளி ஓவியர் இராஜதுரை காமிராவோடு காணப்பட்டார்.. இன்னமும் கூட எழுதலாம். வாசிக்க உங்கள் கண்கள் கூட வலிக்கலாம். நன்றி வணக்கம்
என்றும் அன்புடன்
முனைவர் வ ஹரிஹரன்
தமிழ்ப் பேராசிரியர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி
மேலநீலிதநல்லூர் 627953


