தூத்துக்குடியில் 2 பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நகர போலீஸ் துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முறனாக பேசியதால் அவரை மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் எப்போது வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த கோபால்சாமி மகன் ஆறுமுகசாமி (29) என்பதும், இவர் தூத்துக்குடியில் 2 மோட்டார் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பேரூரணி சிறையில் அடைத்தார்.


