7.03.2024 அன்று மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவ மாணவிகள் துறைத்தலைவர் முனைவர் சுதாகர் அவர்கள் தலைமையில் கடையம் நித்திய கல்யாணி கோவில் கல்வெட்டு , தோரணமலை , குலுக்கை மலை போன்ற பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள வந்தார்கள். அவர்களை தோரண மலை முருகன்கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் சார்பில் அவரது சகோதரர் ஜீவா வரவேற்று முருகன்கோயில் பிரசாதம் வழங்கினார். மாணவ மாணவிகள் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள நூலகத்தினை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு அமர்ந்து கடையம் பகுதியில் உள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து கலந்துரையாடல் செய்தனர். தொல்லியல் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன், நண்பர் கடையம் பாரதி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதன் பின் அங்கே மதிய உணவை சாப்பிட்டு விட்டு, களப்பணிக்காக குலுக்கைமலைக்கு சென்றோம். எங்களுக்கு உதவி பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


