வல்லநாடு , ஜன.9. வல்லநாடு சிவன் கோவிலில் மரக்கன்று நடுவிழா நடந்தது.வல்லநாட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கமும் எம்.எஸ்.ராஜா அறக்கட்டளையும் இணைந்த மரக்கன்று நடுவிழா நடந்தது விழாவிற்கு சென்னை வேளச் சேரி அரிமா சங்கத்தைச் சேர்ந்த இலங்கேஷ்வரன் தலைமை தாங்கினார் தலைவர் கணேஷ் செயலர் எம்.எஸ்.ராஜா, பொருளாளர் கில்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முறப்பநாடு காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், பாலையா , இந்து சமய அறநிலையத் துறை ஆய்வர்நம்பி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக அர்ச்சகர் சண்முகசுந்தபட்டர், சந்தோஷ் பட்டர் ஆகியோர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தினர்.விழா ஏற்பாடுகளை திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.


