தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகளை பாா்வையாளா் இ. சரவண வேல்ராஜ் ஆய்வு செய்தாா்.
கடந்த அக். 27ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் இப்பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு பாா்வையாளராக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் இ. சரவணவேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் 2ஆவது முறையாக தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நேற்று வந்தாா். இப்பணியின்போது பெறப்பட்ட படிவங்கள் 6, 7, 8இன் மீது மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது பெற்ற விண்ணப்பங்கள் மீது மேற்கொண்ட கள விசாரணை குறித்துக் கேட்டறிந்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், வட்டாட்சியா் பிரபாகரன், தோ்தல் வட்டாட்சியா் தில்லைபாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


