செய்துங்கநல்லூர், ஜனவரி 8 செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி தட்சிணா ஹிந்தி பிரச்சார சபா சார்பில் நடந்த ஹிந்தி பரிச்சய தேர்வில் 202 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வின் தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் டாக்டர் ஆவுடையப்பன் பணியாற்றினார்.
துணை தலைமை கண்காணிப்பாளராக அமைப்பில் துறை மூத்த விரிவுரையாளர் சந்திரசேகரன் பணியாற்றினார். அறை கண்காணிப்பாளர்களாக சீனிவாசன், சுடலைமணி மற்றும் கல்யாணி ஆகியோர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.



