தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இன்று 300 யூனிட் ரத்த தானம் செய்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளைஞர் ரெட் கிராஸ் அமைப்பு ஆகியவை சார்பில் உதிரம் 23 என்ற பெயரில் அனைவரும் ரத்த தானம் வழங்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர், பயிற்சி மருத்துவர்கள் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரும் மருத்துவக் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணி ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் சபரி ராஜன் ரத்ததான குழு செயலாளர் பயிற்சி மருத்துவர் பிரதீப் மற்றும் மதுமிதா ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.
இவர்கள் வழங்கிய சுமார் 300 யூனிட் ரத்தம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மே மாதம் நடைபெற்ற ரத்த ஆறு முகாமில் 300 யூனிட் ரத்ததானம் செய்து அரசு மறுத்து கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


