தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடங்களை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில் மாவட்ட கனிம வள நிதியின் மூலம் ரூ. 100 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய சுற்றுச்சுவர் பணிகள் ஆகியவற்றினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்தார்.
2022-2023ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணை வழியாக வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூபாய் 100.00 இலட்சம் அனுமதிக்கப்பட்டு, புதிய பள்ளி மற்றும் சமையலறை கட்டிடம் 146.82 M2 தரைதளம் 1580.00 சதுரஅடி அளவில் ரூ.49.00 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் மேற்கூரை பழுதுபார்த்தல், குடிநீர் வசதி, Sanitary Lines மற்றும் உட்புற, வெளிபுற சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் ரூ.12.00 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் 102.20.Rm (335.00 அடி) நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் மோட்டார் அறையுடன் கூடிய நிலத்தடி நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, இப்பள்ளி வளாகம் முழுவதிலும் வண்ண கற்கள் (Paver Block) ரூபாய் 39.00 இலட்சம் செலவில் பதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த புதிய வகுப்பறை, பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய சுற்றுச்சுவர் பணிகள் ஆகியவற்றினை இன்றையதினம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இப்பணிகள் வாயிலாக தற்போது பயிலும் சிறப்பு மாணவ, மாணவியர்கள் (Special Children) மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பொ.ப.து, செயற்பொறியாளர் (கட்டடம்) செல்வி, செயலர், கில்ட் ஆப் சர்வீஸ்/மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


