தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, கார் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுபோல் டிஎம்பி காலனியில் சாலையோரம் நிறுத்தியிருந்த ரூரிஸ்ட் பஸ், மில்லர்புரம் கணேசன் காலனியில் 3ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தியதில், அண்ணா நகர் 3வது தெரு, பிரையன்ட் நகர் 7வது தெருவை சேர்ந்த இளம்சிறார்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றரனர்.


