குலையன்கரிசல் கிராமத்தில் ஸ்பிக் – கிரீன்ஸ்டார் நிறுவனங்களின் சார்பில் ரூ.2லட்சம் செலவில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து சுமார் ரூ.2லட்சம் செலவில் பிரதான கால்வாயில் நீர் செல்ல ஏதுவாக வடிகாலை தூய்மைப்படுத்தும் பணியினை பணிகளை ஸ்பிக் நிறுவன உதவி பொதுமேலாளர் ஜெயபிரகாஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிறுவன ஊழியர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


