தூத்துக்குடி மாவட்டம்,புதியம்புத்தூர் டி.டி.டி.ஏ பள்ளியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் 898 வாக்குச் சாவடி அமைவிட அலுவலர்கள் 1622 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில் பொது மக்கள் மற்றும் இளைய வாக்காளர்களிடம் இருந்து 6 ம் படிவம் – 6643 ( இளம் வாக்காளர்கள் 3696)படிவங்களும் ,6பி படிவம் – 2 படிவங்களும், 7ம் படிவம் -332 படிவங்களும், 8 ம் படிவம் -3664 படிவங்களும் ஆக மொத்தம் 10641 பெறப்பட்டுள்ளது.நேற்றைய முகாமில் பெறப்பட்ட 7681 படிவங்களையும் சேர்த்து மொத்தமாக 18322 படிவங்கள் இவ்விரு தினங்களில் பெறப்பட்டுள்ளது.


