நந்திதா தாஸ் (பிறப்பு 7 நவம்பர் 1969) ஒரு இந்திய நடிகையும் இயக்குனரும் ஆவார். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நந்திதாவின் தந்தை கலைஞர் ஜதின்தாஸ் ஆவார். அவரது தாயார் வர்ஷா தாஸ் ஒரு எழுத்தாளர். நந்திதா மும்பையில் பிறந்தார் எனினும் பெரும்பாலும் டெல்லியில் ஒரு ஒடிசா குடும்பத்தில் வளர்ந்தார்.அங்கு அவர் சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றார். அவர் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் புவியியலில் இளங்கலைப் பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த தில்லி சமூகப்பணிப் பள்ளியில் சமூகப்பணியில் முதுகலை பட்டமும் பெற்றார். நந்திதா தாஸ் 2014 இல் யேலின் சிறந்த உலக மாணவராக இருந்தார். ஏறக்குறைய 4000 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வளர்ந்து வரும் உலகளாவிய தலைவர்களில் இவரும் ஒருவர்.


