தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை கொலை செய்வதற்காக வந்த அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் அம்பேத்கர் நகர், மேலத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகள் உஷா. இவர் உடல் நலம் சரியில்லாத தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தம்பி ஆனந்தராஜ் (29). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு வாசல் முன்பு ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்த ஆனந்தராஜ் நின்று கொண்டிருப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை பிடித்து விசாரித்த போது சொத்து தகராறில் அக்காவை கொலை செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு பெரிய வாளை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


