வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் நடத்தும் போது திமுகவினர் எச்சரிக்கையாக இருந்து பணியாற்ற வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 2026ல் நடைபெறள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் 2வது முறையாக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைத்தது என்ற பெருமை நமக்கு வரவேண்டும். அதற்காக நாம் அனைவரும் இப்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும். பீகாரில் நடைபெற்றதை போல் தமிழகத்தில் வாக்கு திருட்டை தடுக்க திமுகவினர் வாக்களர் சிறப்பு திருத்த பணியின் போது மிக எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடனும் கவனமாக செயல்பட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


