தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலை 7 மணிக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. மாலை 6 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன், அம்மனுக்கு பல வகையான பூக்களுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி, கோவில் பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்திருந்தனர்.


