விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம், சிவஞானபுரத்தில் ஸ்ரீ சண்முகா அணியினர் நடத்தும் மாபெரும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சூரிய ஒளி கபாடி போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி தொழிலதிபர் சங்கர் ராம் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன் கிளைச்செயலாளர் தமிழ்வாணன் வார்டு செயலாளர் லெனின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


