தேசிய அளவில் உயரம் தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவியை கனிமொழி எம்பி பாராட்டினார்.
தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு பெடரேஷன் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் நடந்தது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி சஹானா கலந்து கொண்டு 1.64 மீட்டர் உயரம் தாண்டி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவி சஹானாவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பாராட்டினர். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


