தூத்துக்குடியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலுக்குள் குதித்து மீனவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜேசு நகரைச் சேர்ந்தவர் குருஸ் மஸ்தான் மகன் பரிமளம் (47). மீனவர். இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 பேருடன் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றாராம். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு மீனவருடன் தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து சக மீனவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இன்று காலை கிரேஸ்வரம் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென பரிமளம் கடலுக்குள் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலைத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சக மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


