ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார், மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
ராம் கோபால் வர்மா ஏப்ரல் 7, 1962 ஆம் ஆண்டு அன்று ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத்தில் பிறந்தார். மேலும் கிருஷ்ணம் ராஜு பென்மிட்ச சூரியாம்மா வர்மாவின் பெற்றோர் ஆவார்கள். மற்றும் இவர் தன் இளம் வயதில், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். மேலும் ராம் கோபால் வர்மா அவர்கள் ரத்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டர், இத் தம்பதியருக்கு ரேவதி வர்மா என்னும் ஒரு மகளும் உள்ளார். பின்னர் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின் விவாகரத்து ஆனது.


