மூக்குப்பேறி ஊராட்சி, ஞானராஜ் நகரில் புதிய மின்மாற்றி துவக்கவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பேறி ஊராட்சி, ஞானராஜ் நகரில் புதிய மின்மாற்றி துவக்கவிழா நடைபெற்றது. விழாவில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர் கலந்து கொண்டு மின்மாற்றியை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கமலா கலை அரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் தன சிங் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் நாசரேத் மின் வாரிய துணை இயக்குனர் (பொறுப்பு) மகேஸ்வரி, ஊராட்சி உறுப்பினர் கலை அரசு,முன்னாள் உறுப்பினர் ராபின்,ஒய்யான்குடி தி.மு.க கிளை செயலாளர் மோசஸ் கிருபைராஜ், காந்திநகர் திமுக கிளை செயலாளர் முத்துவேல், ஒன்றிய பிரதி நிதி மணிமாறன், ஷாஜ கான் மின்ஆக்கமுகவர் வேல்முருகன், மின்பாதை ஆய்வாளர் ஞானராஜ், கம்பியாளர் (ஒயர்மேன்) காளி, பொன்னையா, பிரபு, கேங்மேன் ராம்குமார், பெல் வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


