தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் தெரிவிக்கையில், “பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுடன் தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மின் விளக்குகள் அமைப்பதின் மூலம் சுமார் 12 கிலோ மீட்டர் வரை மாநகராட்சியின் எல்லை பகுதிகள் பயன்பெறும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் உடனிருந்தனர்.


