பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வேண்டும், சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தூத்துக்குடி வடக்குமாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன் மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம், ராஜபாண்டி பொதுகுழு உறுப்பினர் முருகன், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றிய செயலாளர் விளாத்திகுளம் தங்கச்சாமி, மாரியப்பன், கோட்டைச்சாமி கோவில்பட்டி பொன்ராஜ்,புதூர் மணிகண்டன், ஆறுமுக பெருமாள், கயத்தார் நடராஜன், கண்ணண், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்


