திருச்செந்தூர் பாலக்காடு ரயில் கொரோனா காலத்துக்கு முன்பு ஓடியது. அப்போது செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று சென்றது. தற்போது இந்த ரயில் விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது செய்துங்கநல்லூர் , தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வருகின்றனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த் ராஜ் அவர்களும் அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. திட்டமிட்டே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள இந்த மூன்று ரயில்நிலையங்களையும் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது.
ஆனால் இங்கு பாஸஞ்சர் ரயிலாக இயங்கி வந்த திருச்செந்தூர் திருநெல்வேலி ரயிலும் விரைவு ரயிலாக இயககப்பட்டும் செய்துங்கநல்லூர் தாதன்குளம் ஸ்ரீவைகுண்டத்தில் நின்றுசெல்கிறது. மேலும் செந்தூர் எகஸ் பிரஸ் ஸ்ரீவைகுண்டம் , செய்துங்கநல்லூர் ரயில் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. மேலும் இந்த இரு ரயில் நிலையமும் இருரயில்கள் நின்று செல்லும் வகையில் தண்டவாளங்கள் அமைககப்பட்டுள்ளது. மிகப்பெரிய ரயில் நிலையங்களாக இந்த நிலையங்கள் இருந்தும் கூட திட்டமிட்டே இந்த ரயில்நிலையங்களை புறக்கணித்து வருகின்றனர்.
இதே நேரத்தில் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தினை பொறுத்தவரை தமிழ்நாடு புறககணிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 16 ந்தேதி இயக்கப்பட்ட இந்த ரயில் கடந்த 24.12.2021 முதல் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வட்டார பொதுமககள் தொடர் முயற்சியால் கேரளாவில் உள்ள ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரயில்வேயில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்கள் ஊரில் மட்டும் ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடர் கோரிக்கை வைத்தும் முன்பு இதே ரயில் நின்று சென்ற செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிற்கவிடாமல் தடுத்து விட்டனர்.
இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம், முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் நிர்வாகிகள், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பொதுமக்களை திரட்டி பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் வருகிற 25 ந்தேதி செய்துங்கநல்லூர் வரும் பாலக்காடு& திருச்செந்தூர் ரயிலை மறியல் செய்துவது என முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இரயில்வே நிர்வாகத்தினால் பாதிககப்பட்ட தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அந்தந்த ரயில் நிலையத்தில் இதே நேரத்தில் மறியல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து கேரளாவுக்கு முககியத்துவம் கொடுத்துவிட்டு தமிழகத்தினை ஓரங்கட்டும் ரயில்வே நிர்வாகத்தினை கண்டித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் கதவுகளை தட்டவும் இப்பகுதி மககள் தயாராகி வருகிறார்கள்.
&&&


