வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேட்டுப்பட்டி திடலில், மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதி செயலாளர் ரியாஸ் வரவேற்பு உரையாற்றினார்.
மேலும், மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர்கௌது மைதீன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அஜீஸ், தொகுதி தலைவர் காதர் உசேன், தொகுதி பொருளாளர் அப்துல் ரசாக், திரேஸ்புரம் கிளை தலைவர் தாஜுதீன், மஸ்ஜிதே முகத்தஸ் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் மஸ்ஜிதே முகத்தஸ், இளைஞர் அறக்கட்டளை நிர்வாகிகள், உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி, மாநில துணை தலைவர், கிண்டி அன்சாரி, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், திராவிட முன்னேற்றக்கழகம் வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், யூசுப், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். கிதர் பிஸ்மி, மத்திய மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், விடுதலை சிறுத்தைகள் கட்சி அர்ஜுன், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோல்டன் பரதர் உட்பட பலர் கலந்து கொணடனர். எஸ்டிபிஐ தொகுதி துணைத் தலைவர் எடிசன் நன்றியுரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் மைதீன்கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


