தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்,மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று 6.11.23 துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள்,இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மரு.எஸ்.சஞ்சீவிராஜ் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்


