
நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காம் வெப்சைட் ல் 132 வது நாடாக வெனிசுவேலா இணைந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் வாசகர்கள் நமது வெப்சைட்டை பார்த்துள்ளனர். இணைந்த வாசகருக்கு நன்றி . தொடர்ந்து ஆதரவு தரும் உள் நாடு மற்றும் மற்ற நாட்டில் வசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. இந்த நாட்டை பற்றி அறிவோம் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
வெனிசுவேலா, தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். அதிகாரபூர்வமாக இது “வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு” என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. வெனிசூலா 353,841 சதுர மைல்பரப்பளவில் 31 மில்லியன் (31,775,371) மக்களைக் கொண்டுள்ளது. நாடு மிகக் கூடுதலான பல்லுயிர் வளம் கொண்டதாக உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான உயில் இனங்கள் கொண்டு, பட்டியலில் உலகிலேயே 7 வது இடத்தில் உள்ளது. மேற்கில் அந்தீசு மலைத்தொடரிலிருந்து தெற்கில் அமேசான் படுகை மழை காடு வரை உள்ளதுடன், மையத்தில் விரிந்த இல்லானோஸ் சமவெளிகள் மற்றும் கரீபியன் கடற்கரை மற்றும் கிழக்கில் ஒரினோகோ ஆற்று வடிநிலப் பகுதியில் பரவியுள்ளது. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார்.
வெனிசுலா என அழைக்கப்படும் இப்பகுதியில் பூர்வகுடி மக்களின் எதிர்புக்கு இடையில் ஸ்பெயினில் இருந்து 1522 ஆம் ஆண்டில் மக்கள் குடியேறி ஸ்பெயினின் குடியேற்ற நாடாக ஆனது. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் இதுவும் ஒன்றாகும், என்றாலும் அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது. 19 ம் நூற்றாண்டில், வெனிசுலா அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை பிராந்திய படைத்தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. 1958 முதல், நாடு ஒரு தொடர்ச்சியான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. 1980 கள் மற்றும் 1990 களில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி பல அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, 1989 இன் கொடிய கராகசோ கலவரங்கள் உட்பட நிகழ்வுகள் நடந்தன. 1998 இல் ஊகோ சாவெசு வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு உலக மயமாக்கலுக்கு எதிரான இடது சாரி ஆட்சியாக உருவானது இது பொலிவியப் புரட்சி என அழைக்கப்படுகிறது. இவர்காலத்தில் வெனிசுலாவின் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதுவதற்கு 1999 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட மன்றம் துவக்கப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பானது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக, புதிய பெயராக ரிப்பலிகா பொலிவியா டி வெனிசுலா (வெனிசுலாவின் பொலிவாரியன் குடியரசு) என மாற்றியது.
வெனிசுலா ஒரு கூட்டாட்சி குடியரசு குடியரசு ஆகும், இதில் 23 மாநிலங்கள், தலைநகர் மாவட்டம் (தலைநகர ஆட்சிப்பகுதி) மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள் (வெனிசுலாவைச் சேர்ந்த கடல் தீவுகளை உள்ளடக்கியது). வெனிசுலாவானது இஸகிபோ ஆற்றின் மேற்குப் பகுதியில் 159,500-சதுர கிலோமீட்டர் (61,583 சதுர மைல்) பரப்பளவிலான எல்லா கயானா பிரதேசங்களையும் உரிமை கோருகிறது. லத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது; வெனிசுலாவின் பெரும்பான்மையானவர்கள் வடக்கே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள், குறிப்பாக வெனிசுலாவிலுள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கும் தலைநகரான கரகஸ் நகரில்.
வெனிசுலாவில் எண்ணெய் வளமானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உள்ளது. முன்பு காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன, அதன்பிறகான காலகட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 களில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, இதில் பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து, 1995 இல் வறுமை விகிதம் 66% ஆக உயர்ந்தது (1998 க்குளான காலம்) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1963 இல் இருந்த நிலைக்கு சரிந்தது, இது அதன் 1978 உச்சகட்ட காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 2000 களின் முற்பகுதியில் எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோதும் 1980 களில் இருந்து வெனிசூலா எண்ணெய் வருவாய் அளவை அடையவில்லை. [7] வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. இருப்பினும், அத்தகைய கொள்கைகள் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிலையில்லா தன்மைக்கு உட்படுத்தியதால் சர்ச்சைக்குரியதாக ஆனது, இதன் விளைவாக அதிகப்படியான பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் வறுமை நிலை கடுமையாக அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன.
மிகவும் பிரபலமான மற்றும் ஏற்கப்பட்ட பதிப்பின் படி, 1499 ஆம் ஆண்டில், அலோன்சோ டி ஓஜாடா தலைமையிலான ஒரு குழு பயணித்து வெனிசூலா கடற்கரையை அடைந்தது. அப்பிரதேசத்துக்கு அமெரிகோ வெஸ்புச்சி வந்தபோது மரக்காபோவின் ஏரிப் பகுதியில் இருந்த கால் வீடுகளைக் கண்டு, அவை வெனிஸ் நகரை அவருக்கு நினைவூட்டியது, அதனால் அவர் வெனிசுலா பகுதிக்கு “பிஸ்கோலா வெனிசியா” என்று பெயரிட்டார். ஸ்பானிய மொழியின் செல்வாக்கின் விளைவாக, அதன் தற்போதைய உச்சரிப்புக்கு திரிந்தது. இப்பகுதியின் பெயர் துவக்கக்காலத்தில் “சிறிய வெனிஸ்” என்று அழைக்கப்பட்டிருக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஜேர்மன் மொழியில் இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், க்ளீன்-வெனெடிக், அதாவது சிறிய வெனிஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது.
எனினும், வெஸ்புச்சி மற்றும் ஓஜெடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்டின் பெர்னாண்டஸ் டி என்சிசோ என்பவர் அவரது படைப்பான சும்மா டி ஜிக்ராஃபியாவில் வேறு ஒரு தகவலைக் கொடுத்தார். அதில் வெனிசுவேலா என்று அழைக்கப்படும் உள்நாட்டு மக்களை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகிறார். இதனால், “வெனிசுலா” என்ற பெயர் அம்மக்களைக் குறிப்பிட்டச் சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம்.
வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்தப் பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும்.
பைக்கோ பொலிவார், 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயரமான மலை ஆகும், இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. வெனிசுலா மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானாவை எல்லைகளாக கொண்டுள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, குறக்ககோ, அருபா, மற்றும் லீவார்ட் அண்டிலிசு போன்ற கரீபியன் தீவுகள் வெனிசுலா வட கடற்கரையின் அருகில் அமைந்திருக்கிறது.
வெனிசுலா கயானாவுடனும்(முன்னர் ஐக்கிய ராஜ்யம்) எஸ்கிபோ என்ற இடத்தில் நிலப்பகுதி மோதல்களை கொண்டுள்ளது. வெனிசுலா கொலம்பியாவுடன் வெனிசுலா வளைகுடா குறித்த மோதல்களை கொண்டுள்ளது.
வெனிசுலா நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், மற்றும் பிற கனிமங்கள் உள்ளன.உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் வெனிசுலாவில் உள்ளது.
வெனிசூலாவில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் அந்நாட்டின் சனாதிபதி நிக்கோலசு மதுரோவால் பொருளாதாரம் சீர்குலைந்து காணப்படுகிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது அதிகாரத்தைக்காட்ட முனைகின்றன. எதிர்கட்சிகள் அதிபரை பதவிலகும்படி கோரிக்கை வைக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இந்நாட்டின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதமாக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்நாட்டிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் மீது உலக நாடுகள் தடைகள் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.