தூத்துக்குடி வெள்ளப்பட்டி தூய நல்ல ஆலோசனை மாதா ஆலய 134ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் காலை திருப்பலியும் மாலை நற்கருணை ஆசிரும் நடைபெறும் . திருவிழாவின் சிகர நிகழ்வான 10ஆம் திருவிழா 14.10.2023 சனிக்கிழமை மாலைஆராதனை மற்றும் நற்கருணை பவணி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். 15.10.2023. ஞாயிறு சிறுவா் சிறுமியா்கள் புது நன்மை, திருவிழா ஆடம்பர திருப்பலி, காலை 8.30 மணிக்கு அன்னையின் தோ்பவணி நடைபெறும். 16.10.2023. திங்கள் மாலை 6 மணிக்கு ஜெபமாலை நன்றி திருப்பலி தொடா்ந்து அசனம் நடைபெறும்.


