சாகுபுரம், டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் துணை பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசினார். வீடுகள் மற்றும் ஆலைகளில் தண்ணீர் சிக்கனம் மற்றும் முறையாக பயன்படுத்துவதை பற்றி மூத்த பொது மேலாளர் (குளோர் ஆல்கலி) கேசவன் அறிவுறுத்தினார். மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன் பிளாஸ்டிக் மறு பயன்பாடு, மறு சுழற்சியில் மக்களின் ஆர்வம் பற்றியும், நாம் கையாள வேண்டிய வழிவகைகளை பற்றிய சிறப்புரையை ஆற்றினார்.
சுற்றுச்சூழல் தின விழா கொண்டாட்டம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவருக்கும். பங்கேற்றவர்களுக்கும் “சூழல் நடப்புமிக்க பரிசுகள்” வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் தினத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக மரக்கன்றுகளை மூத்த ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட செயல் உதவித்தலைவர் (பணியகம்), மூத்த அலுவலர்கள், உயரதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளால் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, சிவில் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.


