அருங்குளம் கிராமத்தில் ரூ.39.95 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணியை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், 15 நிதி குழு மிகை மானியம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.39.95 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், தங்கவேல் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர், அன்புராஜன் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி பவானிசந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர் ஒன்றிய துணைச் செயலாளர், காளிதாஸ் பாண்டியன், ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் சங்கர்ராஜ், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மருதவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


