தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி அவர்கள் ஆலோசனையின் படியும், மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், அவர்களின் வழி நடத்துதலின்படியும் வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் தலைமையாசிரியர் கூட்டம் வட்டார வள மைய கருங்குளத்தில் வைத்து நேற்று தொடக்க ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத மாணவர்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தல், அவர்களை மீள பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்த மாணவர்கள் பற்றிய விவரம் கணக்கெடுத்தல், சிறப்புக் குழந்தைகள் எவரும் விடுபடாமல் கணக்கெடுத்தல், பள்ளி வயது குழந்தைகள், பள்ளி செல்லா மாணவர்கள் விபரம் ஆகியவற்றை சேகரித்தல், அவர்களை மீள ஆய்வு செய்து, சேர்த்தல் ஆகிய பணியினை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் ,சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் இணைந்து செயலாற்ற திட்டமிடப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவசங்கரி, பீபேகம், வெயில் முத்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்


