தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலசுப்பிரமணியன் (27), மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில், நேற்று இரவு கனவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் மன வேதனை அடைந்த பாலசுப்பிரமணியன் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


