முத்துநகர் எக்ஸ்பிரஸ் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
மன்னார்குடி – சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
நெல்லை – சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தம்.
தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்.
மண்டபம் – சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
புதுச்சேரி – சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


