இனாம்கல்லூரணி கிராமத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி, தருவைக்குளம், வேப்பலோடை, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம், இனாம்கல்லூரணி, கீழவைப்பார் பேருந்து வழித்தடத்தை இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இனாம்கல்லூரணி கிராமத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி பொது மேலாளர், கோட்ட மேலாளர், விளாத்திகுளம் கிளை மேலாளர் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, திமுக வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், வைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள்ராமர், தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


