மிக்ஜம் புயலானது விலகியதால் தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலானது சென்னையில் இருந்து விலகி, இன்று ஆந்திர கடற்பகுதியில் கரையைக் கடக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடியில் நாளை (06.12.2023) முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜய ராகவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


