தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.


