செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகராகும். இந்த ஊரில், திருச்செந்தூர் நெடுஞ்சாலை யில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் இருபறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு, சாக்கடை வறுகால் அமைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு பணி நடந்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்களும் தங்குதடையின்றி வாகனத்தில் பயணம் செய்கின்றனர். மேலும் மெயின் ரோட்டுக்கு செய்துங்கநல்லூரில் மேல்பகுதி கீழ்பகுதி என 10க்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்து மக்கள் வந்துசெல்கின்றனர். அதே வேளையில் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் தொலைதூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாலையில் மிக வேகமாக வருகின்றன. அந்த வாகனங்கள் ஊருக்குள் வரும்போதும் அதே வேகத்துடன் வருகின்றனர். எனவே தினமும் சிறு சிறு விபத்து ஏற்பட்டு வருகிறது. சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்க உள்ளது. எனவே செய்துங்கநல்லூரில் சிவந்திபட்டி சாலை சேரும் இடம், அய்யனார்குளம் பட்டி சாலை சேரும் இடங்களில் பேரிகார்டு அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்து வந்தது . இந்தகோரிக்கையை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்திலும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் புதன் கிழமை சந்தையன்று சாலையில் வியபாரம் செய்யும் வியாபாரிகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சாலை ஓரம் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நிற்கிறது. அதையெல்லாம் சாலையில் தான் விடுகிறார்கள்.
எனவே இந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பொருள்கள் வாங்கவும் வியாபாரிகளை சந்தைக்குள் அமர்ந்து வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணனிடம் வைத்தார்.
இந்த இரு கோரிக்கைகளையும் அடுத்த வாரம் திங்கள் கிழமைக்குள் முடித்து தருவதாக எஸ்.பி. வாக்களித்தார். இதனால் செய்துங்கநல்லூர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்பநாபபிள்ளை, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், வியாபாரிகள் சங்க தலைவர் அய்யப்பன், கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம், விவசாயிகள் சங்க தலைவர் குமார், கேம்லாபாத் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோத்தி, தவ்கீத் ஜமாத் அப்துல், மிலிட்டரி ஆறுமுகம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் சுடலை முத்து, திருச்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


