தூத்துக்குடி காராபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி காராபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பள்ளியின் உள்ளே செல்லும் சாலையில் வடிகால் ஒன்று அமைத்து தருமாறு பள்ளி நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.
விழாவில் பள்ளியின் செயலாளர் விநாயகமூர்த்தி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், தலைமையாசிரியர் பொன் சண்முக லதா, மாமன்ற உறுப்பினர் ரிக்டா, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, காராபேட்டை பெண்கள் பள்ளியின் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


