தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பி அன் டி காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.
மேலும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால் கால்வாய் பணியையும் அப்பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க வேண்டிய இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மாமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


