மூக்குப்பீறியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமையவிருக்கும் பயணி கள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மூக்குப் பீறி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயணியர் நிழற் குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமை வகித்தார். சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார்.
ஊராட்சி துணை தலைவர் தனசிங், உறுப்பினர் கலை யரசு ஆகியோர்முன்னிலை வகித்தனர். தமிழக மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் புதிதாக பயணிகள் நிழற் குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய திமுக செயலாளர் நவீன் குமார், உள்படபலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் கமலா கலையரசு தலைமை யில் ஊராட்சி செயலர் ஸ்டெல்லா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந் தனர்.


