தூத்துக்குடியில் மாயமான பள்ளி மாணவர்கள் 3பேர் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 3பேர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் மாயமாகி விட்டனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு நெல்லையில் மீட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாணவர்கள் 3பேரும் உரிய விசாரணைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


