தூத்துக்குடி மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சாலை மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக அமைந்துள்ளதுடன் விஷஜந்துக்கள் தங்குமிடமாகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக காணபப்படுகிறது, எனவே இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் அவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை 7 தினங்களுக்குள் அவ்வாகனங்களின் உரிமையாளர்களே தாங்களுக்கு பாத்தியப்பட்ட சொந்த இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.
அவ்வாறு சாலை மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் 1998ம் வருடத்திய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்பிரிவு எண் 128-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தாதப் பட்சத்தில் மாநகராட்சியால் அகற்றி, பறிமுதல் செய்வதோடு எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக்கப்படாது மேலும் அவ்வாகனத்தை அப்பபுறப்படுத்துவதால் ஏற்படக்கூடிய செலவினங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படுமென மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்கள்


