தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார். இந்தவிருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசிரியை வனிதாவை பள்ளி தாளார் அருட்தந்தை ஜாக்சன், தலைமை ஆசிரியை சகாய செல்வி, மற்றும் சக ஆசிரியர்கள், கருங்குளம் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள். இவர் சாத்தூர், கோட்டாச்சியர் கனகராஜ் அவர்களின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.


