தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு ஆக.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்திய எலும்பியல் சங்கம் (IOA) சார்பில் எலும்பு மற்றும் மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் இயங்கி வரும் அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை இலவச முகாம் நடைபெறுகிறது.
பிரபல எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தும் வகையில் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


