தூத்துக்குடியில், பால், காபி, டீத்தூள் விலை உயர்வால் டீ, காபி விலை ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், காபி, டீத் தூள் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக தூத்துக்குடியில் உள்ள சில ஹோட்டல்களில் டீ, காபி விலை ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சில கடைகளில் டீ கடைகளில் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகிறது. காபி, டீ விலை திடீர் உயர்வால் டீ-காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


