வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்தில் உட்பட்ட வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில் இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தலைமை வகித்தார். உதவி மாவட்ட வன அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெகிழிகளை மறந்து மீண்டும் மஞ்சப்பை மாறும் நோக்கில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


