தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரக்கன்றுகள் நட்டு இயற்கை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். இதில், திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின், தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


