உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை உதவி இயக்குனர் ம. பேச்சியம்மாள் தொடங்கி வைத்தார்.உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாகிவிட்டதன் விளைவு அதன் அபாயகரமான நிலைமைகளை மக்களுக்கு உணர்த்தி, சுற்றுச்சூழலை மேம்படுத்திட மதர் சமூக சேவை நிறுவனம் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுதல், மரக்கன்றுகள் வழங்குதல், கடற்கரை, பூங்கா, மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்தல், நீர் நிலைகளை பாதுகாத்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, மாநாடுகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு “மஞ்சப்பை” வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி பனை மர விதைகளை விதத்தில் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்கள் அதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சை.சையது முகம்மது மதர் சமூக சேவை நிறுவன செயலாளரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைச் செயலாளருமான செ. செல்வகுமார் முன்னிலை வகித்தார். மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது மக்கள் தொகை பெருக்கத்தால் மரங்கள் வெட்டப்படுகின்றன மரங்களும் தாவரங்களும் தான் மற்ற உயிரினங்களின் உணவு சங்கிலியாக உள்ளன. இவை அளிக்கப்படுவதால் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டு உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் பூமியில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தோடு ஆலை கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் நீரில் கலந்து நீர் மாசு அடைகிறது. வாகனப் புகையால் காற்று மாசு அடைகிறது. எண்ணெய், நிலக்கரி, விறகு, போன்றவை எரிப்பதால் கார்பன்- டை – ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் வாய் மண்டலத்தில் கலந்து பசுமைக்சூழலை கெடுக்கிறது. இதனால் பூமி சூடாகிறது. பூமி வெப்பம் அடைவதால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டும் உயர்கிறது. இதனால் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. 10 லட்சம் தாவர – விலங்குகள் அழியும், இமயமலை உருகுவதால் தண்ணீர் பஞ்சமும், உணவு பஞ்சமும் ஏற்படும். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் தான் அதே சமயத்தில் இந்த சுற்றுச்சூழல் பாதிப்படைதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் மனிதர்களாகிய நாம் தான். மனிதர்களாகிய நம்மால் தான் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அப்படி செய்தால் இந்த பூமியில் உயிர்களும் நாமும் தொடர்ந்து வாழ முடியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் தொடர்ந்து செயல்படுவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மதர் சமூக சேவை நிறுவனர் இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் இந்த தருணத்தில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியை பாராட்டுகிறேன். தொடர்ந்து இப்பணியை செய்ய வேண்டும் என கூறினார்.முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் நன்றி கூறினார்.


