கருங்குளம் ஒன்றியம் தெற்கு காரசேரி பஞ்சாயத்தில் உலக சுற்று சூழல் தினவிழாவை முன்னிட்டு 250 மரக்கன்று நடும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பேபி தலைமை வகித்தார். கவுன்சிலர் மாடத்தி, கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பஞ்சாயத்து எழுத்தர் முருகன் வரவேற்றார். பணி மேற்பார்வையாளர் பத்மகலா மரக்கன்றுகளை நட்டு, மரம் நடும் பணியை துவக்கி வைத்தார். ஸ்ரீனிவாச அறக்கட்டளை சார்பில் சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன், பிரகாஷ், கிராம வளர்ச்சி அலுவலர் பாலா, இன்டர்ஸ்நாக் கேஷிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பிளான் மேனேஜர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர். பணியாளர்கள் ஒரே இடத்தில் 250 மரக்கன்றுகளையும் நட்டனர். கருங்குளம் ஒன்றிய அளவில் 6 ஆயிரம் மரக்கன்றும், தூத்துக்குடி மாவட்ட அளவில் 1 லட்சம் மரக்கன்றும் நடப்பட்டது.


