தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஊராட்சி ஒன்றிய செய்துங்கநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி அணுகுவதற்கு சாய்வு தளம் அமைக்க வலியுறுத்தியும் செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் சுற்று வட்டார பகுதியில் இருந்து வங்கி கணக்கு வைத்துள்ளனர் வங்கி கணக்கு வைத்துள்ள சில மாற்றுத்திறனாளிகள் எழுத படிக்க தெரியாதவர்கள் மற்றும் ஓரளவு படித்தவர்கள் வங்கியில் கொடுக்கின்ற விண்ணப்பம் படிவம் நிரப்ப தெரியாமல் சிரமப்படும் நிலை உள்ளது ஆகையால் இந்தியன் வங்கியில் விண்ணப்பம் படிவம் பூர்த்தி செய்ய தனியாக உதவியாளர் ஒருவரை ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்திற்கு மணி மந்திரம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் தோழர் கண்ணன் கண்டன உரை ஆற்றினார் மாற்றுத்திறனாளிகள் திரளானோர் பங்கேற்றனர். அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக சென்று வர சாய்வு தளம் அமைக்க அரசாங்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசினுடைய சுற்றறிக்கை காற்றில் விடப்பட்டன முற்றோர் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் மத்திய அரசின் விதிகள் 2017 பிரிவு 45 உட்பிரிவு 2 உரிய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் அனைத்து கட்டிடங்கள் மற்றும் அத்தியாவாசிய தேவைகள் வழங்கும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகுவதற்கு ஏற்றவாறு கட்டிடம் செயல்திட்டம் வகுத்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டமும் காற்றில் பறக்க ப்படுகிறது


